கோவை: தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பெயர்பலகை விவகாரம்

0பார்த்தது
கோவை: தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பெயர்பலகை விவகாரம்
கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், வளர்ச்சி பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்தை ஒட்டி, மலைப்பாதை படிக்கட்டுகள் மற்றும் மண்டபங்களில் சிலரது பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்ட பெயர்பலகைகள் வைக்கப்பட இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் செயல் அதிகாரியிடம் மனு பெற்றனர். வாக்குவாதத்திற்குப் பிறகு போலீசார் போராட்டக்காரர்களை கலைந்துபோகச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி