கோவை: வீசப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மீட்பு

0பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில், பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தை கேட்பாரற்று வீசப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தையை வீசிச் சென்றவர்களை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி