கோவை: சாலையில் திறந்த மழைநீர் வடிகால் மக்கள் அச்சம்!

1பார்த்தது
கோவை: சாலையில் திறந்த மழைநீர் வடிகால் மக்கள் அச்சம்!
கோவை ராமநாதபுரம் சிக்னலில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையில், ஸ்ரீபதிநகர் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகாலின் கான்கிரீட் மூடுகள் 2 இடங்களில் உடைந்து திறந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் நிலவுவதுடன், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விபத்து அச்சம் உருவாகியுள்ளது. திறந்த வடிகாலுக்கு அருகே குழந்தைகள் விளையாடுவதால் எப்போது விபத்து நேரும் என்ற பயம் நிலவுகிறது. எனவே, திறந்த பகுதிகளில் கான்கிரீட் மூடுகள் அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி