கோவை: கூலி உயர்வு தராவிட்டால் போராட்டம்: விசைத்தறியாளர்கள்!

0பார்த்தது
2025 ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை ஆட்சியரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று மனு அளித்தனர். சங்கத் தலைவர் பூபதி கூறுகையில், சோமனூர் ரகத்திற்கு 15% மற்றும் மற்ற ரகங்களுக்கு 10% கூலி உயர்வு அறிவிக்கப்பட்டும், பல உற்பத்தியாளர்கள் அதை வழங்கவில்லை. கூலி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படாவிட்டால், மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்புடைய செய்தி