கோவை: வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

212பார்த்தது
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பெரிய நந்தி மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவனடியார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி