கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பேராசிரியர்கள் மூன்றாவது முறையாக நேற்று மாலை திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பங்கேற்று, 18 ஆண்டுகளாகப் பணியாற்றியும் பதவி உயர்வு மற்றும் பணப் பலன்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். முன்னதாக இரண்டு முறை கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பேராசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்பை நிர்வாகம் மதிக்கவில்லை என்றும், நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.