கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பாஜக வாக்காளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாததைக் கண்டித்து, பாஜக மாநில செயலாளர் நந்தகுமார் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்தியதாக அவர் தெரிவித்தார். அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்ததாக அவர் கூறினார்.