கோவை: பலாத்கார வழக்கு: 72 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு

4பார்த்தது
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 72 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஆண் நண்பருடன் காரில் இருந்த மாணவியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன், தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மாணவியின் தாய், கண்காணிப்பு கேமரா அதிகாரி, உயிரியல் பரிசோதனை நிபுணர் என 72 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.