கோவை: கவுண்டம்பாளையம் 13 வீடுகளில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

1பார்த்தது
கோவை: கவுண்டம்பாளையம் 13 வீடுகளில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பகலில் 13 வீடுகள் உடைக்கப்பட்டு, 42 சவரன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் ஆட்டோவில் வந்து சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்தபோது தாக்கி தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். கொள்ளையர்களுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் அயூப்கானும் கைது செய்யப்பட்டார். மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி