மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓதிமலை அடிவாரத்தில், முருகன் காலனி அருகே இன்று புள்ளிமான் ஒன்று காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் வயிற்றுப் பகுதியில் சில பாகங்கள் இல்லாததால், இது சிறுத்தை தாக்குதலா அல்லது தெருநாய்கள் கடித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மானின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.