கோவை: மாணவர் பைக் திருட்டு–CCTV அடிப்படையில் போலீஸ் விசாரணை

0பார்த்தது
கோவை வெள்ளலூர் பகுதியில், கல்லூரி மாணவர் நித்தியாஷின் இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்றாம் தேதி இரவு வாகனத்தை நிறுத்திய நிலையில், மறுநாள் காலை அது காணாமல் போனதை கவனித்து புகார் அளித்தார். அருகிலுள்ள CCTV காட்சிகளில், நள்ளிரவில் இருவர் வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், CCTV அடிப்படையில் திருடர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் மாணவர்களின் வாகனத் திருட்டுகள் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி