அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக நிலவும் கடுமையான கோடை வெயிலால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு, வாழை, தென்னை மற்றும் கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருவதால், விவசாயிகள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு கவலையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.