கோவை புலியகுளம் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில், தர்மபுரியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் அக்ஷய் குமார் உயிரிழந்தார். காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் தங்கி தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார். புலியகுளம் ரெட்பீல்ட் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் தறிக்கி விழுந்ததில், மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அக்ஷய் குமார் உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.