கோவை: டிரெக் தமிழ்நாடு - நாளை முதல் மலையேற்றம் ஆரம்பம்

79பார்த்தது
கோவை: டிரெக் தமிழ்நாடு - நாளை முதல் மலையேற்றம் ஆரம்பம்
தமிழக வனத்துறையின் டிரெக் தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் நாளை முதல் மலையேற்றம் அனுமதிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே திறக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தின் 40 மலைவழித்தடங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து மலையேற்றம் மேற்கொள்ளலாம். எளிய, மிதமான மற்றும் கடினமான வழித்தடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில், மானாம்பள்ளி உட்பட ஏழு வழித்தடங்களில் மலையேற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெள்ளியங்கிரி பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதால் அங்கு மலையேற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, தமிழகம் முழுவதும் 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கோவையில், மானாம்பள்ளி வழித்தடம் நாளை முதல் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மற்ற வழித்தடங்கள் விரைவில் திறக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். நீலகிரியில் 6 வழித்தடங்களிலும், திருப்பூரில் ஒரு வழித்தடத்திலும் தற்போது மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால், மலையேற்றத்திற்கு அதிக அளவில் முன்பதிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி