கோவை: பெண் கடத்தல்: சாட்சி பெண் வாக்குமூல ஆடியோ வெளியீடு

331பார்த்தது
கோவை இருகூரில் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணின் காவல் விசாரணை ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில், காரில் இருந்த ஆண் ஒருவர் பெண்ணின் கழுத்தை நெரித்ததை தாம் பார்த்ததாகவும், அதைக் கண்டு வாகனங்களை நிறுத்த முயன்றும் யாரும் நிறுத்தவில்லை என்றும், அம்மா வலிக்குது என்ற சத்தம் மட்டும் கேட்டதாகவும், பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றுவது தாம் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி