கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட வதம்பச்சேரி ஊராட்சி, வடுகபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லை. இதனால் அதிருப்தியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை பொள்ளாச்சி–திருப்பூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.