கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் கள்ள நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற சதாம் உசேன், பைசல், ஹக்கீம் ஆகிய 3 பேர் நேற்று (மே 17) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 36,000 மதிப்பிலான போலி நோட்டுகள், கள்ள நோட்டு அச்சிடும் இயந்திரம் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஹக்கீம், 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலுக்கு பின்னால் வேறு தொடர்புகள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.