கோவையில் மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி அறிமுக விழா

223பார்த்தது
கோவை போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மக்கா பள்ளிவாசல் தலைவர் அப்துல் கபூர் மற்றும் ஜனநாயக வெற்றி கழக தலைவர் ஒயிட் பாஷா முன்னிலையில் நேற்று மாலை நிகழ்ச்சி துவங்கியது. கட்சியின் நிறுவனர் கோவை இல்முதீன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நூர் முகமது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி