கோவையில் புதுப்பெண்ணை தாக்கிய கணவர் குடும்பத்துடன் கைது

82பார்த்தது
கோவையில் புதுப்பெண்ணை தாக்கிய கணவர் குடும்பத்துடன் கைது
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சரவணக்குமார் (29). ஐடி ஊழியர். இவருக்கும், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த பூஜாஸ்ரீ (27) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் பூஜாஸ்ரீ கடந்த 17ம் தேதி சரவணக்குமாரின் செல்போனை பார்த்துள்ளார். அப்போது, அதில் சரவணக்குமார் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போட்டோ இருந்ததாக தெரிகிறது.

 இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூஜாஸ்ரீ தனது கணவர் சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர் கல்யாணசுந்தரம் (60), கல்பனா (48) ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர், பூஜாஸ்ரீயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பலத்த காயம் அடைந்த பூஜாஸ்ரீ கிழக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர் கல்யாணசுந்தரம், கல்பனா ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி