கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பீர்மொய்தீன். இவர் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் ஆரோக்கியசாமி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது போதையில் வாகனத்தை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து மருத்துவ சோதனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தார். விசாரணையில், அவர் தடாகம் ரோடு பால் கம்பெனி பகுதி வள்ளியம்மாள் வீதியை சேர்ந்த ராஜன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.