
காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே வசிக்கும் ரமேஷின் மகனான ஜெகன், காந்திபுரத்தில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் பிளஸ் டூ படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி மேம்பாலத்தில் இருந்து குதித்த இவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று (ஜனவரி 14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து குதித்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
































