
கோவை: கோர விபத்தில் மில் தொழிலாளி பலி!
சூலூர் அருகே பள்ளபாளையம்–பாப்பம்பட்டி சாலையில், தனியார் மில் தொழிலாளியான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து இருளாண்டி, இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றபோது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.






















