நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது ஆண் சடலமாக மீட்பு!

0பார்த்தது
கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நீலாம்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆரம்ப விசாரணையில், நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you