மேட்டுப்பாளையம் அருகே நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற கார் மோட்டார் பைக்கில் மோதியதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் குமார் (25) மற்றும் அபி நாயகன் (20) ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். காரமடை போலீசார் அவர்களை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.