சித்தாபுதூர் வெங்கடசாமி சாலையைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் கண்ணன் (25). இவர் கடந்த 1-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ரவீந்திரன் உட்பட 5 நண்பர்களுடன் பாரில் மது அருந்தினார். பின்னர் அவர்களுடன் வாடகை கார் ஒன்றில் பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டுப்பகுதிக்கு வந்தார். அங்கு உள்ள பூங்கா அருகே நண்பர்களுடன் மீண்டும் மது அருந்தி உள்ளார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் அவர்கள் கண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பினர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஸ்ரீஹரன், ஹரிகிருஷ்ணன், சதீஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் ரவீந்திரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று (அக்.,5) கைது செய்தனர்.