கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம்..கைதான காமுகன்

75பார்த்தது
கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம்..கைதான காமுகன்
கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயதான பெயிண்டர் மீது, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுமி மற்றும் பெயிண்டர் இடையே காதல் உருவாகி, பெற்றோர் எதிர்ப்பை மீறி, அவர்கள் கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

திருமணத்தின் போது சிறுமிக்கு 16 வயதே இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ள சிறுமி, சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெறும்போது இந்த விவரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து குழந்தைகள் நல உதவி மையம் மூலம் கோவை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பெயிண்டரை இன்று (ஜூன் 12) விசாரணைக்கு அழைத்துள்ளனர் மற்றும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி