கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று அளித்த பேட்டியில், அ. தி. மு. க. எங்கள் உயிர் மூச்சு என்றும், கட்சியில் முழு ஒற்றுமை நிலவுகிறது என்றும், எடப்பாடி பழனிசாமியே பொதுச் செயலாளர் என்றும் தெரிவித்தார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து மீண்டும் வெற்றிக்காக பணியாற்றுவோம் என்றும், தி. மு. க. அரசுக்கு எதிராக செயல்படுவதே நோக்கம் என்றும் கூறினார். கோவையில் சிறுமி பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்து, குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை என்றார். வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.