கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய ஒருவர், போதை தலைக்கேறியதால் அன்னூர் பிரதான சாலையின் நடுவே படுத்து ரகளையில் ஈடுபட்டார். பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோதும் அசையாமல், 'ரோடு எங்க அப்பன் போட்டது' என வடிவேல் பாணியில் கூச்சலிட்டார். மேலும், கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாகவும் வாக்குவாதம் செய்தார். வாகனங்கள் விலகிச் சென்ற பிறகு அவர் நகர்ந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் இன்று வைரலாகியுள்ளது.