தமிழக முன்னாள்
பாஜக தலைவர்
அண்ணாமலை, கட்சித் தலைமை தன்னை புறக்கணிப்பதாகவும், தவறான
முடிவுகள் எடுப்பதாகவும் கூறி
பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். தொடர்ந்து மேலிட தலைவர்களும் அண்ணாமலையிடம் சமரசம் செய்தனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,
அண்ணாமலை தமிழகத்தை மையப்படுத்திய, மதசார்பற்ற, இளைஞர்களை மையப்படுத்திய புதிய கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். நாளை ஜூன் 5ம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.