கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் அமுதா (35) திடீரென உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் திடீரென அவரைத் தாக்கினர். இதில் காயமடைந்த அமுதா மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்தப் பிரச்சனையில் ஜெயா, பானு, சூர்யா ஆகிய மூவரும் சம்பந்தப்பட்டவர்கள் என ரேஸ்கோர்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.