தமிழக–கேரள எல்லைப் பகுதியான வாளையாறு மான்கள் பூங்கா அருகே வட்டப்பாறை பகுதியில் நேற்று யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி 4 வயது ஆண் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். மதுக்கரை வனப்பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள்–ரெயில் மோதல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள எல்லைப் பகுதிகளிலும் இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.