கோவை: பக்ரீத் பண்டிகை - கால்நடை வதை செய்யக்கூடாது

0பார்த்தது
கோவை: பக்ரீத் பண்டிகை - கால்நடை வதை செய்யக்கூடாது
கோவையில் வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் பசுமாடுகள் வதை செய்யப்படுவதாக இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. துடியலூர், உக்கடம், குனியமுத்தூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக செட் அமைத்து கால்நடைகள் அடைத்து வைக்கப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கள்ளமேடு பகுதியில் 6 பசுமாடுகள் மீட்கப்பட்டதாக கூறிய அக்கட்சி, இந்தாண்டு பொது இடங்களில் வதை செய்யக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே காளைமாடுகள் அறுக்கப்பட வேண்டும் என கோரி மாநில பொறுப்பாளர் சூர்யா பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி