கோவை: கார் கவிழ்ந்து விபத்து - டிரைவருக்கு லேசான காயம்

1பார்த்தது
கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி. டி. நாயுடு மேம்பாலத்தில், ஹோப் காலேஜ் அருகே ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 60 கி.மீ. வேக வரம்பு உள்ள மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி