கோவை போத்தனூரைச் சேர்ந்த அந்தோணிதாஸ் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகியோர் நேற்று நள்ளிரவு எல் அண்டு டி சாலை அருகே உள்ள பேக்கரியில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்தோணிதாஸ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.