கோவை: கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2பார்த்தது
கோவை: கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு வரம்பில், கடந்த 14.10.2025 அன்று 6 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சபரிநாதன் (28) என்பவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரது செயல்கள் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாதகமாக இருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரைத்ததின்பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி சபரிநாதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்திற்கான நகல் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி