கோவை: காகங்கள் மரணம்.. பறவை காய்ச்சல் அச்சத்தில் மக்கள்

594பார்த்தது
கோவை: காகங்கள் மரணம்.. பறவை காய்ச்சல் அச்சத்தில் மக்கள்
சென்னையில் காகங்கள் இறந்த சம்பவங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவை குனியமுத்தூரில் நேற்று சாலையோர மரத்தடியில் பல காகங்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த காகங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய சுகாதார மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மனிதர்களுக்கு பாதிப்பு பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி