அதிமுக ஆட்சிக்காலத்தில் சூலூர் கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலைக்கு எதிராக திமுகவினர் கடந்த 2018இல் செய்த மறியல் போராட்டத்தைக் காரணமாக வைத்து, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோவை 1வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக நிர்வாகிகள் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் ஆஜரானார்கள். விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, சரவணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.