கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. டிஎன்ஏ அறிக்கை வந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.