வால்பாறை நகராட்சி அலுவலக ஊழியர் கலீல் ரகுமான், அரசு பேருந்தில் கண்டெடுத்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையாக வால்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதே நேரத்தில், தமிழ் அழகன் என்பவர் தனது குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதாக புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, கலீல் ரகுமான் ஒப்படைத்த சங்கிலியை தமிழ் அழகனிடம் ஒப்படைத்தனர். நேர்மையுடன் செயல்பட்ட கலீல் ரகுமானை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.