கோவை மாவட்டத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு சார்பில் பச்சரிசி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடந்த ஆண்டு பெற்ற மொத்த அனுமதி விவரங்களின் பட்டியலை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.