கோவை: கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் மீது விசாரணை

606பார்த்தது
கோவை: கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் மீது விசாரணை
கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னலில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்ணை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், குழந்தை குறித்து அந்த பெண் முரண்பட்ட தகவல்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார். குழந்தையை கடத்தி பிச்சை எடுக்க பயன்படுத்தியாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி