கோவை அருகே துடியலூர் ஜி. என். மில்ஸ் மீனாட்சிக்கார்டன் 3-வது வீதியில் வசிக்கும் பிரகாஷ் (53) என்பவர், ராஜ வாய்க்கால் பகுதியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முகவரி கேட்பது போல் பேசி, அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதில் பிரகாஷுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.