கோவை: கணபதி நகரில் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

2பார்த்தது
கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவிலின் கும்பாபிஷேகமும், காலபைரவர் சந்நிதி பிரதிஷ்டையும் இன்று நடைபெற்றது. கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கிய விழாவில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பிரம்மஸ்ரீ கல்யாணராம சர்மா தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூலவர் ராஜகோபுரம், காலபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகளின் கலசங்களுக்கு பல புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களைப் பயன்படுத்தி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இவ்விழாவில் புனித தீர்த்தத் தெளிப்பு நடைபெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட மகா அன்னதானமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி