கோவையின் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் குடோனில் இருந்து ரூ. 11.5 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். பேக்கிங் பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள், சோப்பு பவுடர் ஆர்டர் செய்தது போல் காட்டி, அதற்குப் பதிலாக மடிக்கணினிகளை தங்கள் முகவரிக்கு அனுப்பியதாக கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.