கோவை: கலெக்டர் அலுவலகத்தில் பாட்டியின் உணவை பங்கிட்ட குரங்கு

2பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஒரு குரங்கு புகுந்து, அங்குள்ள சிறுதானிய உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் தட்டிலிருந்த சப்பாத்தியைப் பறித்துச் சாப்பிட்டது. குரங்கின் திடீர் வருகையால் அங்கிருந்தோர் சிலர் அச்சமடைந்தனர். இந்த நிகழ்வை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். குரங்கு சிறிது நேரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி