கோவை: கட்டடத்திலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

83பார்த்தது
கோவை: கட்டடத்திலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
கோவை காந்திநகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). பெயிண்டர். இவர் நேற்று சுந்தராபுரம் அஸ்டலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், சுந்தராபுரம் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக சுந்தராபுரம் முருகா நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி மாரிமுத்து (42), மற்றும் கட்டிட உரிமையாளர் தண்டபாணி (68) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி