கோவையில் செயல்பட்டு வந்த கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெற்றதை அடுத்து, 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கீரணத்தம் பகுதியில் ராகேஷ் சர்மா (36) என்பவருக்குச் சொந்தமான கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். சோதனையின் போது, அங்கு 8 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்களையும், அவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (30) மற்றும் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த முருகானந்தம் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் ராகேஷ் சர்மாவை தீவிரமாக தேடி வருகின்றனர். ராகேஷ் சர்மா மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.