கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி பொதுமக்கள் மனு

66பார்த்தது
கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி பொதுமக்கள் மனு
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மக்கள், மூன்று தலைமுறைகளாக ஓடை புறம்போக்கு, அரசு புறம்போக்கு மற்றும் பஞ்சமி நிலங்களில் வசித்து வருகின்றனர். இலவச வீட்டுமனை பட்டா கோரியும், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், காட்டம்பட்டி, முதலிபாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று மனு வழங்கினர். மனுவை பெற்ற தாசில்தார் யமுனா, 10 நாட்களில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி