அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் உள்ள மயான நிலத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மயானத்தில் குப்பை கொட்டுவது பொருத்தமற்றது என வார்டு கவுன்சிலர் உட்பட மக்கள் வலியுறுத்தினர். கலெக்டர் தற்காலிக இடம் ஒன்றை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், புதிய இடம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அன்னூர் பேரூராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.