கோவை: வாக்காளர் கணக்கீட்டு படிவம் நிரப்ப கியூஆர் கோடு

12பார்த்தது
கோவை: வாக்காளர் கணக்கீட்டு படிவம் நிரப்ப கியூஆர் கோடு
கோவை மாவட்ட ஆட்சியரின் முயற்சியால், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் அல்லது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் உள்ளதா என கண்டறிய புதிய மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கியூஆர் கோடு வழியாக பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், 5 வினாடிகளுக்குள் அதே தொகுதியில் உள்ள ஒரே மாதிரியான பெயருடைய வாக்காளர் விவரங்கள் தமிழில் காண்பிக்கப்படும். பெற்றோர் பெயர்களை வைத்து சரியான விவரத்தை உறுதிப்படுத்தலாம். தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் உள்ளீடு செய்து தேடலாம். இந்த செயலி மூலம் கணக்கீட்டு படிவங்களை சரியாக பூர்த்தி செய்ய வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், voters.eci.gov.in/login தளத்தில் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தாமாகவே உறுதி செய்து கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி